கே.ஆர்.பேட்டை: தாறுமாறாக ஓடிய கார், ஏரியில் பாய்ந்தது - வாலிபர் மீட்பு
கே.ஆர்.பேட்டை தாலுகாவில் தாறுமாறாக ஓடிய கார், ஏரியில் பாய்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மண்டியா,
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா குர்னேராஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர் நேற்று முன்தினம் தனது காரில் வீட்டிலிருந்து புறப்பட்டார். அவர் கே.ஆர்.பேட்டை மெயின் ரோடு அக்கி ஹெப்பால் சாலையில் வந்து கொண்டிருந்தார். அவர் கதரகட்டா கிராஸ் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார், நவீன்குமாரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் அமைந்திருக்கும் நேரலகட்டே ஏரியில் பாய்ந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து வந்து ஏரியில் குதித்து காரில் இருந்து நவீன்குமாரை மீட்டனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏரியில் இருந்து காரை மீட்டனர். பின்னர் இதுபற்றி கே.ஆர்.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நவீன்குமாரை சிகிச்சைக்காக மண்டியா மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story