மாவட்ட செய்திகள்

உளுந்தையில் இன்று நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் 13–ந் தேதிக்கு மாற்றம் + "||" + People's communication project will be shifted to 13th

உளுந்தையில் இன்று நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் 13–ந் தேதிக்கு மாற்றம்

உளுந்தையில் இன்று நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் 13–ந் தேதிக்கு மாற்றம்
உளுந்தையில் இன்று நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் 13–ந் தேதிக்கு மாற்றம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிர்வாக காரணங்களால் மாற்றம் செய்யப்பட்டு வருகிற 13–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும்.

இதில் அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள். எனவே பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.