மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம்–எண்ணூர் துறைமுகம் சுற்றுவட்ட சாலை கருத்து கேட்பு கூட்டம் + "||" + Mamallapuram - Ennore port Orbit Road View Demand Meeting

மாமல்லபுரம்–எண்ணூர் துறைமுகம் சுற்றுவட்ட சாலை கருத்து கேட்பு கூட்டம்

மாமல்லபுரம்–எண்ணூர் துறைமுகம் சுற்றுவட்ட சாலை கருத்து கேட்பு கூட்டம்
மாமல்லபுரத்தில் இருந்து எண்ணூர் துறைமுகம் வரை அமைக்கப்படும் சென்னை சுற்றுவட்ட சாலை தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு,

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையால் காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பிலிருந்து எண்ணூர் துறைமுகம் வரை சிங்கபெருமாள்கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவயல், காட்டுப்பள்ளி வழியாக சென்னை சுற்றுவட்ட சாலை அமைக்கப்படுகிறது.

இதுதொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் செங்கல்பட்டு கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்று கருத்துகளை, கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசியதாவது:–

மாநில நெடுஞ்சாலைத் துறையால் மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பிலிருந்து எண்ணூர் துறைமுகம் வரை அமைக்கப்படும் சென்னை சுற்றுவட்ட சாலை பணிக்காக நிலம் எடுப்பு நடைபெறவுள்ளது. அப்போது நிலம் மட்டுமின்றி வீடுகள், கடைகள் உள்ளிட்ட சொத்துகளுக்கும் பாதிப்புகள் வருகிறது. அப்பாதிப்புகளை சரிசெய்யும் விதத்தில் சரியான அளவீட்டையும், தேவையான இழப்பீட்டையும் வழங்க சரியான கணக்கெடுக்கும் பணி நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

சொத்துகளின் வழிகாட்டுதல் மதிப்பு மற்றும் சந்தை மதிப்புகளை கொண்டு இழப்பீடு தொகை வழங்கப்படும். தற்போது முதல்கட்ட நடவடிக்கைகள் தான் எடுக்கப்பட்டு வருகின்றன. நில எடுப்பில் அவசரம் காட்டப்படமாட்டாது. உடனடியாக வீடுகளை காலி செய்ய சொல்வார்கள் என்கிற பயம் தேவையில்லை. பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு பாதிப்பு இன்றி தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, நிலஎடுப்பு முழுமையாக நடைபெற காலஅவகாசம் தேவைப்படும். அதற்குள் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலர் வயலுக்கு நீர்பாய்ச்சும் ஆழ்துளை கிணறு பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர். அவர்களுக்கும் மின்சார வாரியம் மூலம் வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் இரண்டாக பிரியும் வயல்களுக்கு சாலையின் குறுக்கே குறிப்பிட்ட இடைவெளியில் வழியும், கல்வெட்டும் அமைக்க வழிகாணப்படும். மக்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை அரசுக்கு தெரிவித்து, அரசு வழிகாட்டுதலின்படி மேலும் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் டி.முத்துவடிவேல், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன், செந்தூர்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்; கலெக்டர் தகவல்
பண்ணை குட்டை அமைக்க நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
2. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா? நீர்நிலைகளை ஆய்வு செய்ய மீட்பு குழுவை நியமித்தது மதுரை ஐகோர்ட்டு
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய நீர்நிலை மீட்பு குழுவை மதுரை ஐகோர்ட்டு நியமித்தது. அந்த குழுவுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது.
3. அணையில் இருந்து நீர் திறப்பு: வைகை ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது கலெக்டர் நடராஜன் எச்சரிக்கை
அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் வைகை ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது என் கலெக்டர் நடராஜன் கூறியுள்ளார்.
4. 21–ந் தேதி மிலாது நபி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் கதிரவன் தகவல்
மிலாது நபியையொட்டி வருகிற 21–ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என கலெக்டர் கதிரவன் தகவல் தெரிவித்துள்ளார்.
5. ஆஸ்பத்திரி-பள்ளிக்கூடங்களில் திரவ கிருமிநாசினி பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடங்களில் திரவ கிருமிநாசினி பயன் படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.