மும்பையில் மழைக்கு 38 பேர் பலி: மாநகராட்சி அதிர்ச்சி தகவல்
மும்பையில் மழைக்கு 38 பேர் பலியானதாக மாநகராட்சி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
மும்பை,
மும்பையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து பருவமழை பெய்ய தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும், மரம் முறிந்தும், மழைக்கால நோயாலும், ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்தும் உயிர் பலிகள் ஏற்பட்டு உள்ளன. இப்படி மழைக்கால நோய் மற்றும் மழை தொடர்பான விபத்துகளின் மூலம் மும்பையில் கடந்த மாதம் முதல் தற்போது வரை 38 பேர் பலியாகி உள்ளதாகவும், 56 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் மும்பை மாநகராட்சி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
இவர்களில் 28 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானவர்கள் ஆவர். கடந்த 5-ந்தேதி ஜூகு கடலில் மூழ்கி இறந்த 4 வாலிபர்களும் இதில் அடங்குவார்கள். 6 பேர் மரம் முறிந்து பலியாகி உள்ளனர். 3 பேர் எலிக்காய்ச்சல் நோயால் இறந்தவர்கள்.
ஒருவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர் ஆவார். இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு மழைக்கு 26 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story