மாவட்ட செய்திகள்

கூகுளில் தேடும்போது கவனிக்க வேண்டியது + "||" + When searching on Google

கூகுளில் தேடும்போது கவனிக்க வேண்டியது

கூகுளில் தேடும்போது கவனிக்க வேண்டியது
தேடுதல் என்ற சொல்லுக்கான மாற்றாகவே கூகிளிங் என்னும் சொல் புழங்கத் தொடங்கிவிட்டது.
ய்வுகளுக்காக கூகுள் தேடல்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயம் தான். முன்பு நமக்குத் தேவையான விஷயத்தைத் தேட அந்தப் புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டியிருக்கும். தற்போது கூகுள் தேடலில் நமக்கு வேண்டிய சொல்லை எழுதிச் சொடுக்கினால் தேடல் முடிவுகள் வந்து விடுகின்றன. ஆனால் ஒரு சிக்கல் என்னவென்றால் கூகுள் தேடல் முடிவுகள் அனைத்தையும் நாம் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

புத்தகப் பிரதிகளிலும் இதுபோன்ற தவறுகள் நிகழ்வது உண்டு. ஆனால் இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தால் இங்கு நிறைய தகவல்கள் ஆதாரமில்லாமல் பகிரப்படுகின்றன. முழுக்க இணையத்தை நம்பி இருந்தால் ஆபத்துகள் நிகழும். சரியான தகவல்களை அடைய தேடுபவருக்கு அந்த துறை பற்றிய அடிப்படையான அறிவு இருக்க வேண்டியது அவசியம். அப்படியானவர்களுக்குத்தான் கூகுள் தேடல் உபயோகமாக இருக்கும்.

கூகுள் தேடல் அடிப்படையில் ஒரு தெளிவை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியாது. கூகுள் தேடு பொறியில் தரப்படும் முடிவுகள், எவ்விதமான தணிக்கையும் செய்யப்படாதவை. இதுபோன்று, இடங்களின் பெயர்கள், சில வரலாற்று தலைவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், தலைவர்களின் பொன்மொழிகள் ஆகியவை பெரும் பிழைகளுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதற்கு எந்த வரையறையும் இல்லை.

கூகுள் ப்ளாக் சேவையைப் பயன்படுத்தி பலர் எழுத வந்தனர். அது ஒரு சாதகமான அம்சம். ஆனால் அவர்கள் செவிவழிச் செய்திகளை அடிப்படை ஆதாரமின்றி பகிரத் தொடங்கினர். உதாரணமாக, மகாத்மா காந்தி தொடர்பாக பல்வேறு விதமான கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவை புராணக்கதை தன்மையிலான கதைகள். அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இருக்காது. இதன் அடிப்படையில் ஒரு மாணவன் காந்தியின் வரலாற்றை ஆராய்ந்தால் அது மோசமான வரலாற்றை உருவாக்கிவிடும் அபாயம் இருக்கிறது.

தேடுதல் என்ற சொல்லுக்கான மாற்றாகவே கூகிளிங் என்னும் சொல் புழங்கத் தொடங்கிவிட்டது. என்ன ஆடை வாங்கலாம்? என்ன படிக்கலாம்? சமையல் செய்வது எப்படி? இந்தச் சொல்லுக்குப் பொருள் என்ன? இது போன்ற அன்றாடத் தேவைகளுக்காக கூகுள் பயன்படத் தொடங்கி உள்ளது. ஆனால் கல்வி, ஆய்வு இவற்றுக்காகப் பயன்படுத்தும் போது கூடுதல் விழிப்புணர்வு அவசியம் ஆகிறது. கூகுள் என்பது நம் தேடலுக்கான முடிவு அல்ல. அது ஓர் ஆரம்பம் மட்டுமே என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.