வரலாற்று டைரி


வரலாற்று டைரி
x
தினத்தந்தி 13 July 2018 3:45 AM IST (Updated: 11 July 2018 12:29 PM IST)
t-max-icont-min-icon

உலக வரலாற்றில் இதே நாளில் (ஜூலை 13-ல்) நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிவோம்...

* 1832-ல் ஆண்டு அமெரிக்க புவியியலாளர் ஹென்ரி ஸ்கூல்கிராப்ட் என்பவரால் மிஸிசிப்பி ஆறு கண்டுபிடிக்கப்பட்டது.

* 1930-ல் முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி உருகுவேயில் இதே நாளில்தான் தொடங்கியது.

* 1943-ல் ரஷியா-ஜெர்மனி இடையே உலகின் மிகப்பெரிய ராணுவ டாங்கி மோதல் நடந்தது. 6 ஆயிரம் டாங்கிகள் போரில் கலந்து கொண்டன. ஜெர்மனி 2 ஆயிரத்து 900 டாங்கிகளை இழந்தது.

* 1966-ல் பக்திவேதானந்த சுவாமி பிரபுடா, இஸ்கான் அமைப்பை நியூயார்க்கில் தொடங்கினார்.

* 1985-ல் லண்டனின் வாம்லே மைதானம் மற்றும் பிலடெல்பியாவின் கென்னடி மைதானத்தில் ‘லைப் எய்டு’ எனப்படும் ஆப்பிரிக்க அகதிகள் நிவாரணநிதி திரட்டும் முகாம் நடந்தது. 70 மில்லியன் டாலர் தொகை வசூலாகி சாதனை படைத்தது.

* வரலாற்று புகழ்பெற்ற மன்னர் ஜூலியஸ் ஜீசர், (கி.மு.100), ரூபிக் சதுரத்தை கண்டுபிடித்த எர்னோ ரூபிக் ஆகியோரின் பிறந்தநாள் இன்று.

* 1923-ல் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் மலைமீது, படப்பிடிப்பு அலுவலகங்களுக்கான இடமாக அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது உலகப்புகழ்பெற்ற இடமாக ஹாலிவுட் விளங்குகிறது. 

Next Story