பாளையங்கோட்டையில் மாம்பழச்சங்க விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


பாளையங்கோட்டையில் மாம்பழச்சங்க விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 11 July 2018 3:20 PM IST (Updated: 11 July 2018 3:20 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நெல்லை திருமண்டல மாம்பழச்சங்க விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் நெல்லை திருமண்டல மாம்பழச்சங்க விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாம்பழச்சங்க விழா

டி.டி.டி.ஏ. நெல்லை திருமண்டல மாம்பழச் சங்க விழா மற்றும் 238-வது வருடாந்திர தோத்திரப் பண்டிகை நேற்று தொடங்கியது. நேற்று மாலை மிலிட்டரி லைன் கிறிஸ்து ஆலய வளாகத்தில் அருட் தொண்டர்களின் தியாக நினைவு தோத்திர ஆராதனை நடைபெற்றது. பின்னர் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாம்பழச் சங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருமண்டல ‘லே’ செயலாளர் வேதநாயகம் தலைமை தாங்கினார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிஷப் ஜெபச்சந்திரன் ஆராதனை நடத்தினார். டி.டி.டி.ஏ. நிர்வாக தலைவர் விஜிலா சத்யானந்த் எம்.பி. கொடியேற்றினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விழாவில் திருமண்டல உபதலைவர் பில்லி, குருத்துவ காரியதரிசி ஸ்டீபன் செல்வின்ராஜ், பொருளாளர் தேவதாஸ் ஞானராஜ், இயக்குனர்கள் கே.பி.கே.செல்வராஜ், சாம்சன் பால்ராஜ், தங்கதுரை, ஒருங்கிணைப்பாளர்கள் பீட்டர் தேவதாஸ், விஜயசிங், தாளாளர்கள் ஜீவக்குமார், அருள் சாமுவேல், காபிரியேல் தேவா, வக்கீல் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று மிலிட்டரி லைன் ஆலயத்தில் இருந்து நூற்றாண்டு மண்டபத்துக்கு ஊர்வலமாக செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் தடை விதித்ததால் ஊர்வலம் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

திருவிருந்து ஆராதனை

2-வது நாளான இன்று (புதன்கிழமை) நூற்றாண்டு மண்டபத்தில் காலை திருவிருந்து ஆராதனையும், மதியம் பண்டிகை ஆராதனையும் நடைபெறுகிறது. மேலும் கிறிஸ்தவர்கள், ஏழைகளுக்கு தானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் 238-வது தோத்திர பண்டிகை நடைபெறுகிறது.

Next Story