கல்லூரி பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கல்லூரி பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 July 2018 3:45 AM IST (Updated: 11 July 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளால், செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பியோடினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார், எசனை–அனுக்கூர் சாலையில் உள்ள வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளால், செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story