மாவட்ட செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை + "||" + The suicide of a poisoned drunkard near Srimushan

ஸ்ரீமுஷ்ணம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ஸ்ரீமுஷ்ணம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சோழத்தரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாராயணசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நாராயணசாமியின் மனைவி வேம்பு ஸ்ரீ முஷ்ணம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது கணவர் நாராயணசாமிக்கும் அதேஊரை சேர்ந்த மகாராஜன் மகன் தமிழ்செல்வன் என்பவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக தமிழ்செல்வன், மதுபாலன், தமிழழகன், குபேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து எனது கணவரை தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த எனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் எதிர்ப்போம்; முதல் அமைச்சர் நாராயணசாமி பேட்டி
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணையை கட்டினால் எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
2. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வேலையை செய்கிறார் கவர்னர் கிரண்பெடி மீது, நாராயணசாமி குற்றச்சாட்டு
அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வேலையை கவர்னர் கிரண்பெடி செய்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
3. புதுவை மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் முட்டுக்கட்டைகள் அகற்றப்படும் தீபாவளி வாழ்த்து செய்தியில், நாராயணசாமி தகவல்
புதுவை மாநில மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் முட்டுக்கட்டைகள் அகற்றப்படும் என்று தீபாவளி வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
4. பல முட்டுக்கட்டைகளை தாண்டி மக்களுக்காக இரவு பகலாக உழைக்கிறோம் - நாராயணசாமி பேச்சு
பல முட்டுக்கட்டைகளை தாண்டி மக்கள் நலனுக்காக இரவு பகலாக உழைக்கிறோம் என்று காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
5. கவர்னர் மாளிகையை பலகீனமாக்க நினைக்கிறார்: நாராயணசாமியால் வெற்றி பெற முடியாது - கிரண்பெடி ஆவேசம்
கவர்னர் மாளிகையை பலகீனமாக்கும் நினைக்கும் முதல்–அமைச்சர் நாராயணசாமியால் வெற்றி பெற முடியாது என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.