பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரில் மூழ்கி வாழைகள் சேதம் நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரில் மூழ்கி வாழைகள் சேதம் நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 July 2018 10:45 PM GMT (Updated: 11 July 2018 8:19 PM GMT)

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரில் மூழ்கி வாழைகள் சேதம் அடைந்ததால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பவானிசாகர்,

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ளது. இந்தநிலையில் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர், புதுக்காடு, கல்ராய்மொக்கை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கதலி, நேந்திரன் வாழைகள் அதிக அளவில் பயிரிட்டு உள்ளனர். தற்போது வாழைகள் குலைதள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளன.

அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் இப்பகுதியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. இதன்காரணமாக வாழைகள் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி பயிரிடப்பட்டுள்ள வாழைகளுக்கு லட்சக்கணக்கில் செலவிட்டு உள்ளோம். எனவே சேதமடைந்த வாழைகளை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ள னர்.



Next Story