மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் + "||" + In Bangalore Congress MLAs meeting led by Sitaramaya

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சார வரியை குறைக்குமாறு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய எம்.எல்.ஏ.க்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்பட சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் முடிவுகளை கைவிடுமாறு குமாரசாமிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் மின்சாரம் மீது உயர்த்தப்பட்டுள்ள வரியை வாபஸ் பெறவும் வலியுறுத்துமாறு அவர்கள் கூறினர்.

பட்ஜெட்டில் வட கர்நாடகம் புறக்கணிக்கப்பட்டதாக எச்.கே.பட்டீல் எம்.எல்.ஏ. எழுதிய கடிதத்திற்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினர். அன்ன பாக்கிய திட்டத்தில் 2 கிலோ அரிசியை குறைத்ததற்கு எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த விஷயத்தில் முன்பு இருந்த நிலையே தொடர்ந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டதை கூட்டி, வட கர்நாடகத்திற்கு பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள அநீதி குறித்து விவாதித்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு எம்.எல்.ஏ.க்கள் கூறினர். கர்நாடக மேல்-சபை தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்க வேண்டும் என்றும், அந்த பதவியை எக்காரணம் கொண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறினர்.

இந்த கூட்டத்தில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் எச்.கே.பட்டீல், சதீஸ் ஜார்கிகோளி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை. வேறு சில காரணங்களினால் இன்னும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை என்று காங்கிரசார் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. முதல்-மந்திரி குமாரசாமி - சித்தராமையா அவசர ஆலோசனை
20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்ல திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து முதல்–மந்திரி குமாரசாமி, சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினர்.
2. மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சித்தராமையா அறிவுரை
பெலகாவி காங்கிரஸ் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சித்தராமையா அறிவுறுத்தினார்.
3. சிபிஐ, அமலாக்கப்பிரிவு அழுத்தம் காரணமாகவே மாயாவதி அஜித் ஜோகியுடன் கூட்டணி - காங்கிரஸ்
மாயாவதி மற்றும் அஜித் ஜோகியின் கூட்டணிக்கு பா.ஜனதாவின் ஆதரவு உள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.
4. மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜனதா எனக்கு எதிராக பயன்படுத்துகிறது - மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜனதா எனக்கு எதிராக பயன்படுத்துகிறது என்றும், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
5. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி: எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி செய்வதாக எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.