மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கும் பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + A woman driving a motorcycle Suicide

மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கும் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கும் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கோரேகாவில், மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கும் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,

மும்பை கோரேகாவை சேர்ந்த பெண் சேத்னா பண்டித்(வயது27). இவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட விரும்புபவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தார். இவருடன் வீட்டில் அவரது சகோதரர் தங்கியிருந்தார். நேற்றுமுன்தினம் இரவு சேத்னா பண்டித் வீட்டில் தனியாக இருந்தார். அவரது சகோதரர் வெளியில் சென்றிருந்தார்.


பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பிய போது, அறையில் சேத்னா பண்டித் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த போலீசார் சேத்னா பண்டித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தூக்கில் தொங்குவதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், தனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.