அரசு மருத்துவக்கல்லூரியில் 10 பாடப்பிரிவுகளில் பட்ட மேற்படிப்பு தொடங்க திட்டம் நாராயணசாமி தகவல்


அரசு மருத்துவக்கல்லூரியில் 10 பாடப்பிரிவுகளில் பட்ட மேற்படிப்பு தொடங்க திட்டம் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 11 July 2018 10:15 PM GMT (Updated: 11 July 2018 11:52 PM GMT)

புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் 10 பாடப்பிரிவுகளில் பட்ட மேற்படிப்பு தொடங்க திட்டம் உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

அனந்தராமன்: புதுவை மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனந்தராமன்: எத்தனை இடம் உயர்த்த போகிறீர்கள்?

நாராயணசாமி: தற்போது 150 இடம் உள்ளது. அதை 200 ஆக உயர்த்த உள்ளோம். அதற்கான கட்டிடம், பேராசிரியர்களை நியமிக்கவேண்டும்.


அனந்தராமன்: புதுவை என்ஜினீயரிங் கல்லூரியை போன்று அதிக அளவில் இடங்களை உயர்த்திவிட்டு அதை நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவில் கொடுங்கள். அதில் ஓரளவு நிதியும் கிடைக்கும். பட்ட மேற்படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன?

நாராயணசாமி: தற்போது எம்.டி. நோய்க்குறியியல், சமுதாய மருத்துவம் ஆகிய பிரிவுகள் உள்ளன. அடுத்ததாக மேலும் 10 பிரிவுகளில் பட்டமேற்படிப்பு தொடங்க இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

Next Story