சிங்கத்துடன் கொஞ்சி விளையாடும் நபர்!


சிங்கத்துடன் கொஞ்சி விளையாடும் நபர்!
x
தினத்தந்தி 14 July 2018 3:15 AM IST (Updated: 12 July 2018 3:19 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவில் சிங்கத்துடன் கொஞ்சி விளையாடிவரும் நபர், உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

மைக் துலானி என்ற அந்நபர், தென் ஆப்பிரிக்காவின் கிளேன் காரிப் விலங்குகள் பராமரிப்பு மையத்தில் சிங்கத்துடன் மிகவும் நட்பாகப் பழகிவருகிறார். அவர் சிங்கத்துடன் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சி உலகெங்கும் பரபரப்பாகப் பரவி வருகிறது.

‘ஸ்மோக்கி’ எனப்படும் அந்த 10 வயது ஆண் சிங்கத்துக்கு மைக் துலானியுடன் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். அவ்வாறு விளையாடும்போதெல்லாம் அது மகிழ்ச்சியால் கர்ஜிக்குமாம்.

துலானிக்கு ஸ்மோக்கியை பிறந்ததிலிருந்தே தெரியும். அப்போதிலிருந்தே அதை துலானிதான் பராமரித்து வருகிறார்.

ஸ்மோக்கிக்கும் துலானிக்கும் இடையே உள்ள உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, முழுக்க முழுக்க அன்பு மட்டுமே அதில் நிரம்பியுள்ளது என கிளேன் காரிப் விலங்குகள் பராமரிப்பு மையத்தின் இயக்குநர் சூசன் ஸ்காட் கூறுகிறார்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிங்கங்களைப் பாதுகாக்கவும் அவை தொடர்பான ஆராய்ச்சியையும், விழிப்புணர்வையும் மேம்படுத்தவும், சிங்கங்களைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளவும் கிளேன் காரிப் விலங்குகள் பராமரிப்பு மையம் செயல்பட்டுவருகிறது. 

Next Story