நெல்லையில் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆலோசனை கூட்டம்
நெல்லையில் அரசு டிஜிட்டல் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
நெல்லை,
நெல்லையில் அரசு டிஜிட்டல் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஆலோசனை கூட்டம்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு டிஜிட்டல் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக அரசின் கேபிள் டி.வி. மேலாண்மை இயக்குனர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கி பேசினார். பொது மேலாளர் ராஜகிருபாகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளதால் அதை எவ்வாறு மேண்மைப்படுத்துவது என்று ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் குறைகளை எப்படி நிவர்த்தி செய்வது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார்கள் வராமல் நிர்ணயிக்கப்பட்ட தொகையை வாங்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
3 மாவட்ட ஆபரேட்டர்கள்
கூட்டத்தில் கேபிள் டி.வி. அதிகாரி முரளி, அரசு கேபிள் டி.வி. தாசில்தார்கள் சந்திரன், செல்வகுமார், இக்னேசியஸ் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், மாவட்ட வினியோகஸ்தர்கள், வட்ட வினியோகஸ்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story