மாவட்ட செய்திகள்

தஞ்சை மேம்பாலத்திற்கு அடியில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது குழந்தை உள்பட 6 பேர் காயம் + "||" + 6 people were injured in the shaft auto collapse under Tanjai span

தஞ்சை மேம்பாலத்திற்கு அடியில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது குழந்தை உள்பட 6 பேர் காயம்

தஞ்சை மேம்பாலத்திற்கு அடியில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது குழந்தை உள்பட 6 பேர் காயம்
தஞ்சை மேம்பாலத்திற்கு அடியில் ஷேர் ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. இதில் குழந்தை உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு அடியில் ரெயில் நிலையத்திற்கு திரும்பும் இடத்தில் ஒரு ஷேர் ஆட்டோ நேற்று மாலை 3.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த ஷேர் ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் திடீரென கவிழ்ந்தது.

ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததை பார்த்த அந்த பகுதியில் சென்றவர்கள் ஓடி வந்து அதில் இருந்தவர்களை காப்பாற்றினர். இதில் ஷேர் ஆட்டோவில் வந்த 3 பெண்கள், கைக்குழந்தை, மற்றும் 2 ஆண்கள் உள்பட 6 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்தவர்கள் ஷேர் ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து விபத்து தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.