மாவட்ட செய்திகள்

ஓசூரில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை + "||" + SSLC in Hosur Student commits suicide police

ஓசூரில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை

ஓசூரில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை
ஓசூரில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி (15). இவர் ஓசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சரியாக செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவருடைய பெற்றோர் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...