பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கைகள் அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது


பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கைகள் அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது
x
தினத்தந்தி 12 July 2018 11:00 PM GMT (Updated: 12 July 2018 6:33 PM GMT)

ஆக்ஸ்போர்டு போன்ற புகழ் பெற்ற 10 பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கைகள் அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது அமைச்சர் கே.பாண்டியராஜன் பேச்சு.

அரியலூர்,

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் 4–வது புத்தக திருவிழாவில் தொல்லியல் புதை உயிரி அரங்கத்தினை நேற்று தமிழ்வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சந்திரகாசி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

புத்தக திருவிழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:– இந்தியாவிலேயே தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு, தொல்லியல் துறைக்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்திய தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, ஆக்ஸ்போர்டு போன்ற புகழ் பெற்ற 10 பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கைகள் அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலைய அரங்குகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு வந்தார். அப்போது தினத்தந்தி பதிப்பக புத்தக அரங்கினை அமைச்சர் பாண்டியராஜன் ஆர்வத்துடன் பார்வையிட்டார். முன்னதாக நேற்று மதியம் அரியலூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தில் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக சுமார் ரூ.2 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தை அமைச்சர் பாண்டியராஜன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story