மாவட்ட செய்திகள்

சாலையில் ஓடிய லாரியில் திடீர் தீ விபத்து + "||" + Near Chengalpattu In a truck running on the road Sudden fire accident

சாலையில் ஓடிய லாரியில் திடீர் தீ விபத்து

சாலையில் ஓடிய லாரியில் திடீர் தீ விபத்து
செங்கல்பட்டு அருகே சாலையில் ஓடிய லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். லாரி சேதம் அடைந்தது.
செங்கல்பட்டு,

நெல்லையில் இருந்து ஒரு டேங்கர் லாரி எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென லாரியின் முன் பக்கத்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது.


இதை பார்த்த டிரைவர் உத்திரகுமார் (வயது 36), ஓடும் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். பின்னர் எரிந்து கொண்டே சாலையில் ஓடிய லாரி, அருகில் உள்ள மலை மீது மோதி மளமளவென தீ பிடித்து எரிந்தது.

இதனைஅடுத்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தீயணைப்புத்துறையினர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.