மாவட்ட செய்திகள்

காணாமல் போன பெயிண்ட் கடை உரிமையாளர் விஷம் தின்று தற்கொலை போலீசார் விசாரணை + "||" + The missing paint shop owner poisoned the suicide police investigation

காணாமல் போன பெயிண்ட் கடை உரிமையாளர் விஷம் தின்று தற்கொலை போலீசார் விசாரணை

காணாமல் போன பெயிண்ட் கடை உரிமையாளர் விஷம் தின்று தற்கொலை போலீசார் விசாரணை
காணாமல் போன பெயிண்ட் கடை உரிமையாளர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் புதுக்கோட்டை மேலராஜவீதியில் பெயிண்ட் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு கடையை பூட்டிவிட்டு சென்றவர், வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து காணாமல் போன அவரை, அவரது மனைவி சந்திரா மற்றும் உறவினர்கள் பலவேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்திரா வல்லத்திராக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் தனது மகளின் செல்போனை தொடர்பு கொண்ட கணேசன், பல்வேறு இடங்களுக்கு பஸ்சிலேயே சென்று வந்த தாகவும், தற்போது புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் எலி மருந்து (விஷம்) தின்று விட்டு அமர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து புதிய பஸ் நிலையத்திற்கு வந்த கணேசனின் உறவினர்கள், அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் எதற்காக விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை போலீசார் வலைவீச்சு
திருச்சி அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. பெருந்துறை அருகே ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை; போலீசார் விசாரணை
பெருந்துறை அருகே தூக்குப்போட்டு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. அ.தி.மு.க. நிர்வாகி கொலை: 4 பேரிடம் விடிய, விடிய விசாரணை
ஓசூர் அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் பிடிபட்ட 4 பேரிடமும் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
4. நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
நாங்குநேரியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
5. நாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
நாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.