வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு


வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 12 July 2018 10:59 PM GMT (Updated: 12 July 2018 10:59 PM GMT)

வேலூர் மீன் மார்க் கெட்டில் வாடகை செலுத்தாத 5 கடை களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத் தனர். 17 கடைகளில் இருந்து ரூ.10 லட்சம் வாடகை பாக்கியை வசூல் செய்தனர்.

வேலூர், 


வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள் ளன. கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களில் பெரும் பாலானோர் சரியாக மாநக ராட்சிக்கு வாடகை செலுத் தாமல் பாக்கி வைத்துள்ளனர். வாடகை பாக்கியை உடனடி யாக செலுத்தக்கோரியும், தவறினால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் பலர் வாடகை பாக்கி செலுத்தவில்லை.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் விஜயக் குமார், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு உடனடியாக ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று முன்தினம் 2-வது மண்டலத் துக்கு உட்பட்ட நேதாஜி மார்க்கெட், சிட்டிங் பஜார், சாரதி மாளிகை பின்புறம் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு சுமார் 350 கடைகளுக்கு பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பது தெரிய வந்தது. முதற்கட்டமாக 67 கடை களுக்கு வாடகை பாக்கியை வசூல் செய்ய சென்றனர். அதில் 65 கடைக்காரர்கள் உடனடியாக மொத்தம் ரூ.14 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தினர். வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்குச் ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று வேலூர் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் 4-வது மண்டல உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் சீனிவாசன், வரு வாய் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்குள்ள 50 மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் 22 கடைகள் பல மாதங்களாக வாடகை செலுத்தாதது தெரிய வந்தது.

வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முயன்றனர். அப்போது 22 கடைகளில், 17 கடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக மொத்தம் ரூ.10 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தினர்.

மற்ற 5 கடைக்காரர்களும் வாடகை பாக்கியை செலுத்த முன்வரவில்லை. இதையடுத்து, 5 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் வாடகை செலுத்திய பிறகே கடையை திறக்க முடியும் என்ற நோட்டீசையும் ஒட்டினர்.

இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story