மாவட்ட செய்திகள்

காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னதானம்– நலத்திட்ட உதவிகள் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தகவல் + "||" + The birthday of Kamarajar Annadhanam on behalf of Congress Party Welfare Assistance

காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னதானம்– நலத்திட்ட உதவிகள் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தகவல்

காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னதானம்– நலத்திட்ட உதவிகள் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தகவல்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்று முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தனர் கூறினார்.

நெல்லை, 

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்று முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தனர் கூறினார்.

திருநாவுக்கரசர் பிறந்தநாள்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழாவையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.எம். சிவகுமார் (கிழக்கு), பழனிநாடார் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேக் வெட்டினார். பின்னர் அவர் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர், இந்திராகாந்தி ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் நிருபர்களிடம் கூறியதாவது:–

காமராஜர் பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நெல்லை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு அன்தானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. பின்னர் காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

2 ஆயிரம் மரக்கன்றுகள்

நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கூண்டு வைத்து பராமரிக்கப்படுகின்றன. தொடர்ந்து பல இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

மேற்கு மாவட்டம் சார்பில் கருவந்தாவில் புதிய நூலகம் திறக்கப்படுகிறது. சுரண்டையில் ரத்ததன முகாம் நடக்கிறது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.