கல் தடுக்கி விழுந்த குழந்தை பரிதாப சாவு


கல் தடுக்கி விழுந்த குழந்தை பரிதாப சாவு
x
தினத்தந்தி 14 July 2018 3:00 AM IST (Updated: 13 July 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே கல் தடுக்கி கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பரமக்குடி,  

பரமக்குடி அருகே உள்ள தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி முனீசுவரி(வயது 20). இவர் தனது 3 வயது குழந்தை சுபஸ்ரீயை அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வரும் வழியில் கல் இடறி குழந்தை சுபஸ்ரீ கீழே விழுந்துள்ளாள். அதோடு குழந்தை சுபஸ்ரீயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற முனீசுவரி தூங்க வைத்துள்ளார்.

அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் குழந்தை விழிக்கவில்லை. இதையடுத்து முனீசுவரி அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது குழந்தை இறந்துள்ளது தெரியவந்தது. இதைப்பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் பார்த்திபனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story