கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே குருந்தனக்கோட்டை சின்னவாடகை கிராமத்தில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் குருந்தனக்கோட்டை விளக்கு-மதுரை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை எஸ்.பி.பட்டினம் கனிம்ராவுத்தர் வண்டியும், 2-வது பரிசை சிங்கம்புணரி பழனிச்சாமி வண்டியும், 3-வது பரிசை சுந்தர்ராஜன் வண்டியும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்துகொண்டு 2 பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கல்லூரணி பாலாஜி வண்டியும், 2-வது பரிசை கண்டதேவி மருது, 3-வது பரிசை மேட்டுப்பட்டி ராஜாமணி வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை பரவை சோனைமுத்து வண்டியும், 2-வது பரிசை எஸ்.பி.பட்டினம் உமர் வண்டியும், 3-வது பரிசை தேவகோட்டை தவசி வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story