‘வீடியோ கால்’ மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் - குமரி மாவட்ட சூப்பிரண்டு விசாரணை
வீடியோ கால் மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து குமரி மாவட்ட சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பணியாற்றிவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ‘வீடியோ கால்‘ மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது அதிகாரிகள் குறித்த சர்ச்சையான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் ஒரு போலீ்ஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் போலீஸ் அதிகாரியின் ஆபாச வீடியோ காட்சிகள் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோ, 2 பகுதிகளாக வெளியாகி உள் ளது. முதல் வீடியோவில் போலீஸ் அதிகாரி தனது சீருடையில் டிப்-டாப்பாக காட்சி அளிக்கிறார். தனது செல்போன் மூலம் அவர் ஒரு இளம்பெண்ணுக்கு போன் செய்கிறார். மறுமுனையில் அந்த பெண்ணும் இவரது அழைப்பை ஏற்று பேசுகிறார்.
அவர்கள், ‘வீடியோ கால்‘ முறையில் பேசியதால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், எதிர்முனையில் பேசிய பெண்ணின் படம் தெரியாத அளவுக்கு வீடியோவில் மறைக்கப்பட்டு உள்ளது. பேச்சின் இடையே அந்த இன்ஸ்பெக்டர் மிகவும் ஆபாசமாக வார்த்தைகளை பெண்ணிடம் பேசுகிறார். ஆபாசமாக நடந்துகொள்ளவும் செய்கிறார்.
அடுத்த வீடியோவில் அந்த போலீஸ் அதிகாரி சீருடையை கழற்றி விட்டு அரை நிர்வாண நிலையில் கட்டிலில் படுத்துக்கொண்டு அந்த இளம்பெண்ணுடன் மீண்டும் தனது ஆபாச பேச்சை தொடருகிறார். இந்த முறை ஆபாச செய்கைகள் மேலும் எல்லை மீறுகின்றன. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் இந்த வீடியோக்கள், குமரி மாவட்டத்தை சேர்ந்த போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சையில் சிக்கி இருக்கும் இன்ஸ்பெக்டர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த ஆபாச வீடியோ குறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இதுதொடர்பாக அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார். எனவே அந்த இன்ஸ்பெக்டர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த சர்ச்சையில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story