மாவட்ட செய்திகள்

அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் ஆலோசனை + "||" + Collector consult with all party administrators

அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் ஆலோசனை

அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் ஆலோசனை
வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது குறித்து அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம்,


இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதாவது 11 தொகுதிகளிலும் கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடியில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களும், நகர்புறங்களில் 1,400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்ததன் மூலம் 3,223 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது திண்டிவனம் (தனி) தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், விழுப்புரம் தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும், திருக்கோவிலூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும் என 4 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. அதுபோல் 77 வாக்குச்சாவடிகள் இடமாற்றமும், 15 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டார். அப்போது இந்த பட்டியலை இறுதி செய்வதற்கு முன்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அனைத்துக்கட்சியினர் கருத்து தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது குறித்து அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். இவர்கள், ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் ஆட்சேபனை ஏதும் இல்லை என்று தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்யப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் - கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு
வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
2. திருக்கோவிலூரில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது
திருக்கோவிலூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
3. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு: கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை கலெக்டர் சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார்.
4. பட்டு வளர்ச்சித்துறை மூலம் 194 விவசாயிகளுக்கு ரூ.76 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்
பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 194 விவசாயிகளுக்கு ரூ.76 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. வெள்ளப்பெருக்கால் உடைந்த ஓங்கூர் ஆற்று தரைப்பாலம் சீரமைக்கும் பணி கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்
மரக்காணம் அருகே ஓங்கூர் ஆற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.