தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 July 2018 4:00 AM IST (Updated: 14 July 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

கிருஷ்ணகிரி,

மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருண்பிரகாஷ்ராஜ், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சிக்கண்ணா வரவேற்றார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் வேலூர் இமானுவேல்தாஸ் ஆகியோர் பேசினார்கள். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மதிவாணன், சிவக்குமார், செந்தில்குமார், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகரன், மரியசாந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்க கல்வித்துறையை பள்ளி கல்வித்துறையோடு இணைத்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதேபோல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல்நாசர், முன்னாள் மாநில தலைவர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story