மாவட்ட செய்திகள்

செந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Near the jungle Drinking water Public road stroke

செந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

செந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது மருவத்தூர் ஊராட்சி. இங்கு உள்ள மேற்கு தெருவில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
செந்துறை,

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி செந்துறை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.