மாவட்ட செய்திகள்

கோவையில் நடந்த துயர சம்பவம்:கல்லூரி நிர்வாக கவனக்குறைவே மாணவியின் இறப்புக்கு காரணம்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு + "||" + Tragedy in Coimbatore: The college administration's carelessness is the cause of the death of the student Minister RP Uthayakumar's allegation

கோவையில் நடந்த துயர சம்பவம்:கல்லூரி நிர்வாக கவனக்குறைவே மாணவியின் இறப்புக்கு காரணம்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கோவையில் நடந்த துயர சம்பவம்:கல்லூரி நிர்வாக கவனக்குறைவே மாணவியின் இறப்புக்கு காரணம்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
கோவை கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவே மாணவியின் இறப்புக்கு காரணம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
மேலூர்,


மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூஞ்சுத்தி கிராமத்தில் குடிமராமத்து பணி தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-


தமிழகத்தில் விவசாயிகளின் நம்பிக்கையை முழுமையாக பெற்ற அரசு இது. முதல் கட்டமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1200-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் விவசாயிகளின் பங்களிப்போடு வெற்றிகரமாக தூர்வாரப்பட்டன. தற்போது 2-ம் கட்டமாக ரூ.328 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பூஞ்சுத்தி கிராமத்தில் ரூ.27 லட்சம் மதிப்பில் விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து பணி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட அந்த முன்னெச்சரிக்கை பயிற்சியில் வருந்தத்தக்க வகையில் விபத்து நடந்திருக்கிறது. பேரிடர் குறித்த பயிற்சியில் உரிய முறை கடைபிடிக்காமல் கவன குறைவால் நடத்தப்பட்ட காரணத்தால் மாணவி லோகேஸ்வரி உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்து பயிற்சிக்கு வந்திருப்பதாக கூறப்பட்டது தவறு என முதல் கட்ட விசாரணையில் ஊர்ஜிதமாக்கப்பட்டிருக்கிறது. தனியாரிடம் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு இந்த பயிற்சியை நடத்தியிருக்கிறார்கள்.

எப்படி அந்த தனியார் கல்லூரி நிர்வாகம் கவனக் குறைவாக இருந்தது என தெரியவில்லை. பொதுவாக நாம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பயிற்சி என்பது தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளோடு, தகுதி வாய்ந்த நல்ல அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களினால் நடத்தப்படுகிறது. இதற்காக தனியார் கல்லூரிக்கு ஏதேனும் சான்றுகள் வழங்கப்பட்டிருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலூர் ஒன்றிய பேரவை செயலாளர் எம்.கே.பாலகிருஷ்ணன், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பி.பெரியசாமி, எஸ்.அம்பலம், பொன்னுசாமி, ஜாபர் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதைதொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை ரிங்ரோடு அம்மா திடலில் அரசின் சாதனைகளை விளக்கி ஜெயலலிதா பேரவை சார்பில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள சைக்கிள் பேரணிக்கான பணியினை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு புதிதாக வைக்கப்பட்டுள்ள சைக்கிளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.