உசிலம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


உசிலம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 13 July 2018 10:45 PM GMT (Updated: 13 July 2018 9:09 PM GMT)

உசிலம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் நகராட்சி சார்பில் அகற்றப்பட்டது.





உசிலம்பட்டி,

உசிலம்பட்டியில் உள்ள போஸ்ட் ஆபிஸ் தெருவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளது. இங்கிருந்து உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரேஷன் பொருட்கள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த தெருவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், அதனால் ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்ல வரும் லாரிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன. அதைத்தொடர்ந்து உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் சுப்பையா தலைமையில் நேற்று போஸ்ட் ஆபீஸ் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


இந்த தெருவில் மதுரை, தேனி போன்ற ஊர்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் பலர் தங்களுடைய இருசக்கர வாகனங்களை நிறத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் காவல்துறையினரும் கை கட்டி வேடிக்கை பார்த்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த தெருவில் போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டுமென்றால், இருசக்கர வாகனத்தை நிறுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story