மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: கணவன் சாவு; மனைவி உயிர் ஊசல் + "||" + Car collision on motorcycle: husband's death, Wife's life pendulum

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: கணவன் சாவு; மனைவி உயிர் ஊசல்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: கணவன் சாவு; மனைவி உயிர் ஊசல்
கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன் பரிதாபமாக இறந்தார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரெயிலடி தெருவை சேர்ந்தவர் ராஜூ(வயது 38). விவசாயி. இவரது மனைவி கனகா(32) இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று திருவையாறு அருகே உள்ள திங்களூர் கிராமத்தில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி இருவரும் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.


கும்பகோணம்-திருவையாறு சாலையில் மோமேஸ்வரபுரம் பஸ் நிலையம் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திருவையாறில் இருந்து கும்பகோணம் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.

இதில் கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜூ பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கனகா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின் றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மதுக்கடை விற்பனையாளர்களை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கபிஸ்தலம் அருகே மதுக்கடை விற்பனையாளர்களை தாக்கி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 பேர் பலி
அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
3. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. திண்டிவனம் பகுதியை கலக்கிய மோட்டார் சைக்கிள் திருடன் கைது
திண்டிவனம் பகுதியை கலக்கிய மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்தனர்.
5. ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி; 2 பேர் படுகாயம்
ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதலில் கல்லூரி மாணவர் பலியானார்.