மாவட்ட செய்திகள்

16 கிலோ போதைப் பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது + "||" + 16 kg of drugs and arrested a foreigner

16 கிலோ போதைப் பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது

16 கிலோ போதைப் பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது
விமான நிலையத்தில் 16 கிலோ போதைப் பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.20 மணி அளவில் வெளிநாடு செல்லும் விமானம் ஒன்று தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் செல்வதற்காக வெளிநாட்டு பயணி ஒருவர் வேகமாக வந்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் அவரது உடைமைகளை வாங்கி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவர் உடைமைகளில் மறைத்து வைத்திருந்த 16 கிலோ எடையுள்ள அம்பேட்டமின் என்ற போதைப்பொருள் சிக்கியது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்து, அந்த பயணியை சாகர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தான்சானியா நாட்டை சேர்ந்த ஜூலியஸ் பிரான்சிஸ் சின்கோகாகி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.