மாவட்ட செய்திகள்

ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் லிங்கனமக்கி அணை வேகமாக நிரம்புகிறது + "||" + Jog falls into the water falls

ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் லிங்கனமக்கி அணை வேகமாக நிரம்புகிறது

ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் லிங்கனமக்கி அணை வேகமாக நிரம்புகிறது
கடந்த 2 வாரங்களில் மட்டும் ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் 800 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சிவமொக்கா,

லிங்கனமக்கி அணை கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி உலக பிரசித்தி பெற்றது. கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக சிவமொக்கா மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சிவமொக்கா மாவட்டத்தில் ஓடும் துங்கா, பத்ரா உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


அதேபோல் ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சியில் அமைந்துள்ள ராஜா, ராணி, ராக்கெட், ரோரர் ஆகிய நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நீர்வீழ்ச்சியின் அழகு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.

இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஜோக் நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2 வாரங்களில் மட்டும் ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் 800 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் லிங்கனமக்கி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன்காரணமாக லிங்கனமக்கி அணையில் இருந்து நீர் மின்சார உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.