கூடங்குளத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு சமாதான கூட்டத்தில் முடிவு

கூடங்குளத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு சமாதான கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 15 July 2018 2:30 AM IST (Updated: 14 July 2018 7:09 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பது என சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சேரன்மாதேவி, 

கூடங்குளத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பது என சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சமாதான கூட்டம் 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் கடந்த மாதம் செய்தித்தாள் மூலமாக விளம்பரம் செய்து 40 பேரை வேலைக்கு தேர்வு செய்ததாகவும், இதில் உள்ளூர் மக்களுக்கோ, நிலம் வழங்கியவர்களுக்கோ வேலை வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து கூடங்குளத்தில் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், வருகிற 16–ந் தேதி (நாளை) கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது அறிவிக்கப்பட்டது.

பின்னர் இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் ஆகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள், கூடங்குளம் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில், நிலம் வழங்கியவர்களின் வாரிசுகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பணியில் முன்னுரிமை கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து, முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர். 

Next Story