சரத்குமார் பிறந்தநாளையொட்டி பாளை. அரசு ஆஸ்பத்திரியில் சமத்துவ மக்கள் கட்சியினர் ரத்ததானம்
சரத்குமார் பிறந்த நாள் விழாவை நேற்று தமிழகம் முழுவதும் அவருடைய கட்சி நிர்வாகிகளும், ரசிகர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
நெல்லை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் பிறந்த நாள் விழாவை நேற்று தமிழகம் முழுவதும் அவருடைய கட்சி நிர்வாகிகளும், ரசிகர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
நெல்லை மாநகர் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியினர் சரத்குமார் பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ரத்ததானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சேவியர் தலைமை தாங்கினார். மாநில துணைபொதுச்செயலாளர் சுந்தர் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கிவைத்தார். இதில் பகுதி செயலாளர்கள் ஜார்ஜ், ஸ்ரீதர்ராஜன், கலை இலக்கிய அணி செயலாளர் செல்வசுப்பிரமணியன், மகளிர் அணி செயலாளர் பொன்னுத்தாய், துணை செயலாளர் இசைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 64 பேர் ரத்ததானம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை பகுதி செயலாளர் அலுவலகம் முன்பும், பழையபேட்டை 50–வது வார்டிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக நெல்லை புதிய பஸ்நிலையத்தில் கட்சியினர் கேக் வெட்டி, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேவியர் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் அவைத்தலைவர் ராஜன், பகுதி செயலாளர் ஸ்ரீதர்ராஜன், ஜார்ஜ், தொகுதி செயலாளர் ராகவன், இளைஞர் அணி முரளி, மாணவர் அணி பவுல் ஆதித்தன், கலை இலக்கிய அணி செல்வ சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story