மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 July 2018 10:24 PM IST (Updated: 15 July 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம், தச்சூர், வாழப்பந்தல், மேல்சீசமங்கலம், சேவூர், குண்ணத்தூர், லாடப்பாடி, கல்பூண்டி உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் இருந்து லாரி, டிராக்டர், மாட்டுவண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.

ஆரணி, ஜூலை.15–

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம், தச்சூர், வாழப்பந்தல், மேல்சீசமங்கலம், சேவூர், குண்ணத்தூர், லாடப்பாடி, கல்பூண்டி உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் இருந்து லாரி, டிராக்டர், மாட்டுவண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாலுகா போலீசாருக்கும் வருவாய்த்துறையினருக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில் ஆரணி நகர போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு மற்றும் போலீசார் பையூர் நான்குமுனை சந்திப்பு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மேல்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், கமலகண்ணன் ஆகியோர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 மாட்டு வண்டிகளையும் ஆரணி நகர போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story