மாநில அளவிலான கபடி போட்டி: திருச்சி மாவட்ட அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு


மாநில அளவிலான கபடி போட்டி: திருச்சி மாவட்ட அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
x
தினத்தந்தி 15 July 2018 4:00 AM IST (Updated: 15 July 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை மாநில அளவிலான 45-வது ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.

திருச்சி,

திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை மாநில அளவிலான 45-வது ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ள திருச்சி மாவட்ட அணிக்கான கபடி வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடந்தது. திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற இந்த தேர்வில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்க வரும் வீரர்கள் 70 கிலோ எடைஅளவும், வீராங்கனைகள் 65 கிலோ எடை அளவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். நேற்று காலை நடந்த தேர்வின்போது, மாவட்ட தலைவர் நீலகண்டன், செயலாளர் வெங்கடசுப்பு ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நடுவர்கள் கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறமையை பரிசோதித்து, திருச்சி மாவட்ட ஆண்கள் அணிக்கு 12 பேரையும், பெண்கள் அணிக்கு 12 பேரையும் தேர்வு செய்தனர். 

Next Story