குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி
குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மை இயக்குனர் தெட்சிணாமூர்த்தி கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் விவசாயபணிகளை வேளாண்மைத்துறை இயக்குனர் தெட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த புத்தூர் உக்கடை கிராமத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உளுந்து விதைப்பு பணியை தொடங்கி வைத்து உளுந்து விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்து மற்றும் டி.ஏ.பி. ஆகிய இடுபொருட்களையும், திருவையாறை அடுத்த விளாங்குடி கிராமத்தில் எந்திர நடவு மேற்கொண்டுள்ள வயல்களை பார்வையிட்டு 25 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நடவு மானியம், மேல் நுண்ணூட்ட சத்து, சிங்சல்பேட், ஜிப்சம் ஆகியவற்றை மானிய விலையில் வேளாண்மைத்துறை இயக்குனர் தெட்சிணாமூர்த்தி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் நெல் விதைக்கான மானியம், பயறு வகை பயிர்களுக்கான மானியம், எந்திர நடவுக்கான மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகிறது.
முதல்-அமைச்சரால் மொத்தம் ரூ.115 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உளுந்து பயிறு வினியோகமும் அதற்கு தேவையான நுண்ணூட்ட சத்து வினியோகமும் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடியும், 6 ஆயிரம் ஏக்கர் உளுந்து சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத் துறை இயக்குனர் தெட்சிணாமூர்த்தி தலைமையில், கலெக்டர் அண்ணாதுரை முன்னிலையில் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குனர் தெட்சிணாமூர்த்தி பேசுகையில், “குறுவை தொகுப்பு திட்டத்தை பொறுத்தவரை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள் மானியங்களையும், பயறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள் மானியங்களையும் வருகிற 25-ந் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும். எந்திரங்கள், ஆயில் என்ஜின், பி.வி.சி.பைப் மானியங்களுக்கான பயனாளிகளை உடனடியாக தேர்வு செய்து விரைவில் வழங்கிட வேண்டும்.
நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 கோடியே 50 லட்சம் மானிய தொகைக்கான பயனாளிகளை இந்த மாதத்திற்கு தேர்வு செய்து பாசன கருவிகளையும் வழங்க வேண்டும்”என்றார்.
கூட்டத்தில் மாநில தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் தனசேகரன், துணை இயக்குனர் சம்பத் குமார், அயம்வார்ம் திட்ட உதவி இயக்குனர் சுந்தரம், வேளாண் இணை இயக்குனர் மதியழகன், துணை இயக்குனர்கள் கணேசன், ஜஸ்டின், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story