அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
மன்னார்குடி ஒன்றியத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சுந்தரக்கோட்டை,
மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மன்னார்குடி ஒன்றிய 26-வது ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாநில குழு உறுப்பினர் செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மன்னார்குடி ஒன்றியத்தில் உள்ள துளசேந்திரபுரம், கூப்பாச்சிக் கோட்டை, ஆலங்கோட்டை, மகாதேவபட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளை தூர்வார வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாய பின்புலம் கொண்ட மன்னார்குடி ஒன்றியத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும்.
2016-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்தும், அதிகாரிகளின் நிர்வாக குளறுபடியால் இழப்பீட்டுத்தொகை கிடைக்காமல் விடுபட்டுப்போன விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவு மானியம் வழங்குவதில் எந்திர நடவு, கை நடவு என்ற பாகுபாடின்றி மானியம் வழங்க வேண்டும்.
மேட்டூர் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மத்தியில் சாகுபடி செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே தேவையான விதை நெல், உரம் இடுபொருட்களை கையிருப்பில் வைத்திருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஜோசப், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி, வரவேற்புக்குழு தலைவர் ராகவன், பொருளாளர் பழனிமலை, செயலாளர் நாகேஷ், நிர்வாகிகள் அமிர்தஜெயம், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story