திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்த தடை விதித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்,
ஒருமுறை பயன்படும் மற்றும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை, திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் ஒருமுறை பயன்படும் மற்றும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடைவது குறித்தும், மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்பாடு மற்றும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடை செய்யும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக, நேற்று முதல் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பைகளை கலெக்டர் வழங்கினார். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் தாமாகவே முன்வந்து தங்கள் வளாகங்களில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட விவரத்தினை மாவட்ட நிர்வாகத்திற்கு, தெரிவித்தால் பாராட்டு சான்றிதழ் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் என்றும், அடுத்த மாத இறுதிக்குள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஒருமுறை பயன்படும் மற்றும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தின் போது கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story