5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை கிளை சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் லட்சுமிநாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வேம்பு, முத்துகிருஷ்ணன், சித்ரா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணை எண் 403-ஐ ரத்து செய்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாவட்ட மாறுதல் கலந்தாய்வினை மீண்டும் நடத்த வேண்டும். தொடக்கக்கல்வி துறையை பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர் இளமாறன், சங்கத்தை சேர்ந்த பாலசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.


Next Story