ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற விவசாயி கைது


ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 15 July 2018 3:45 AM IST (Updated: 15 July 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற விவசாயி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி பள்ளிவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 30), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார்.

இதுதொடர்பாக ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரமேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதே சிறுமியை கடத்தி சென்றார்.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு வாழப்பாடியில் தலைமறைவாக இருந்த ரமேசை போக்சோ சட்டத்தில் மீண்டும் போலீசார் கைது செய்தனர். மேலும் கர்ப்பிணியான அந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

Next Story