தஞ்சையில் வேளாண்மை அலுவலர் பதவிக்கு போட்டித்தேர்வு 679 பேர் எழுதினர்


தஞ்சையில் வேளாண்மை அலுவலர் பதவிக்கு போட்டித்தேர்வு 679 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 15 July 2018 4:00 AM IST (Updated: 15 July 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் வேளாண்மை அலுவலர் பதவிக்கு போட்டித்தேர்வு நடந்தது. இதில் 679 பேர் கலந்து கொண்டு தேர்வினை எழுதினர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வேளாண்மை துறை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இந்த போட்டித்தேர்வினை எழுத 759 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 679 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 80 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதன் சதவீதம் 89.5 ஆகும். தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வினை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்வு மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தேர்வு நடைபெறுவதை பறக்கும்படை அதிகாரிகளும் கண்காணித்தனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர், நவீன மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. 

Next Story