தீயில் எரிந்து 8 வீடுகள் நாசம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
மதுக்கூர் அருகே தீயில் எரிந்து 8 வீடுகள் நாசம் அடைந்தன. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்டைந்தன.
மதுக்கூர்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரில் பஜனைமடத்தெரு அருகில் நேற்று மதியம் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. அடுத்தடுத்து இருந்த வீடுகளில் திடீரென தீப்பிடித்ததால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்தனர். உடனே அப் பகுதி மக்கள் சேர்ந்து கூரை வீடுகள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து வீடுகள் மீது பற்றி எரிந்த தீ மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அப்பகுதியை சேர்ந்த மாலா, மகேஸ்வரி, குமார், வசந்தி, சாந்தி, பாப்பாத்தி, உமா, குப்பம்மாள் ஆகிய 8 பேரின் வீடுகள் முற்றுலும் எரிந்து நாசமடைந்தது. வீடுகளில் பீரோக்களில் இருந்த பணம், ஆவணங்கள், டி.வி., மின்சாதன பொருட்கள் உள்பட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சி.வி.சேகர் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று வீட்டை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, தாசில்தார் சாந்தகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிதி மற்றும் சி.வி.சேகர் எம்.எல்.ஏ. மதுக்கூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரை.செந்தில் ஆகியோர் வழங்கிய நிதி மற்றும் வர்த்தக சங்கத்தினர் வழங்கிய நிதி என மொத்தம் ஒரு குடும்பத்துக்கு ரூ.30 ஆயிரம், அரிசி மற்றும் அத்திவாசிய பொருட்கள் வழங்கப் பட்டன. இந்த தீ எப்படி பிடித்தது என்று தெரியவில்லை. இதற்கான காரணம் குறித்து மதுக்கூர் போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.
தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து நாசமடைந்த சம்பவம் மதுக்கூர் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story