தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 71 ஆயிரத்து 794 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டியது.
சேலம்,
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்), கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நேற்று காலை நிலவரப்படி 122.70 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 41 ஆயிரத்து 961 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
அதேவேளையில் அணையில் இருந்து 3 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று மாலை 4 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 123 அடி ஆனது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரத்து 460 கனஅடி வீதம் நீர் வந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 31 ஆயிரத்து 794 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதுபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் (கடல் மட்டத்தில் இருந்து) 2,284 அடியாகும். நேற்று காலை நிலவரப்படி கபினி அணையின் நீர்மட்டம் 2,281.46 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 43 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அதே சமயத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரத்து 375 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதற்கிடையே நேற்று மாலை கபினி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. அந்த சமயத்தில் அணையின் நீர்மட்டம் 2,283 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே பாக்கி உள்ளதால், அணைக்கு வரும் 40 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்றைய நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 71 ஆயிரத்து 794 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கர்நாடகத்தில் காவிரி, கபிலா ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட 71 ஆயிரத்து 794 கனஅடி தண்ணீர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் ஒகேனக்கல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து குறைந்ததாலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் பொதுமக்கள் அருவிக்கு செல்வதை தடுக்க போலீசார் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று குறைந்தாலும் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்று 6-வது நாளாக நீடித்தது.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதலாக அதாவது 71 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
தர்மபுரி கலெக்டர் மலர்விழி அதிகாரிகளுடன் ஒகேனக்கல்லுக்கு சென்று நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு கீழ் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் 77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று இரவு 82 அடியை எட்டியது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி என்பது 100 கோடி கனஅடி ஆகும்). நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 41.41 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 46 ஆயிரத்து 613 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இன்னும் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குறுவை சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story