மகேந்திரமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவன் தற்கொலை - பொதுமக்கள் சாலை மறியல்
பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள போரநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி உஷா, கூலித்தொழிலாளியான இவருடைய மகன் தனுஷ் (வயது 17). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளியில் ஆசிரியர் மாணவனை கண்டித்ததாகவும், பெற்றோரை நேரில் அழைத்து வர வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் தனுஷ் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாரண்டஅள்ளி-வெள்ளிசந்தை சாலையில் கொலசனஅள்ளி கிராமத்தில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) காந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Related Tags :
Next Story