சேலம் டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
பிளாஸ்டிக் தம்ளர், தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா? என சேலத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம்,
தமிழகத்தில் 1.1.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதையொட்டி சேலம் மாநகராட்சி பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் வழங்கப்படுகிறதா? என மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இதனிடையே, சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் பார்களிலும் தண்ணீர் பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் தம்ளர் விற்பனை செய்யக்கூடாது என்று சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்படி டாஸ்மாக் பார்களில் மதுபிரியர்களுக்கு பிளாஸ்டிக் தம்ளர்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பிளாஸ்டிக் தம்ளருக்கு பதில் பேப்பர் கப் மட்டுமே மதுபிரியர்களுக்கு மது அருந்துவதற்கு ஊழியர்கள் வழங்குவது தெரியவந்தது. அதேபோல், தண்ணீர் பாக்கெட் வழங்கக்கூடாது என்றும், அதற்கு பதில் தண்ணீர் பாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் பார் உரிமையாளருக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மேலும், தடையை மீறி பிளாஸ்டிக் தம்ளர் மற்றும் தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்வது தெரியவந்தால், பார் உரிமம் ரத்து செய்வதோடு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாரில் வேலை செய்த ஊழியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
இதேபோல், சேலம் மாநகரில் உள்ள மேலும் சில டாஸ்மாக் பார்களுக்கு சென்று அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர். அப்போது, சில பார்களில் பிளாஸ்டிக் தம்ளர் மற்றும் தண்ணீர் பாக்கெட்கள் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது.
சேலம் மாநகரில் முதன்முறையாக கடந்த 1-ந் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை டாஸ்மாக் பார்களுக்கும் பொருந்தும். அதன்படி டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் தம்ளர் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது? அதையும் மீறி விற்பனை செய்யப்படுகிறதா? என தற்போது ஆய்வு செய்துள்ளோம். எளிதில் மக்கக்கூடிய பேப்பர் கப் மட்டுமே மதுபிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சேலம் மாநகரில் 37 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் பார் உள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதேபோல், பார்களை சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்க வேண்டும் என பார் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story