கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
சேலம் சோனா கல்வி குழுமம் சார்பில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு உள்ளது.
சேலம்,
இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
விழாவில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல ஆசிரியர்கள், மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால் தான் அகில இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ-மாணவிகள் அனைவரும் சிறந்த முறையில் கல்வி கற்று பல்வேறு பெரிய பதவிகளுக்கு வர வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், காதர்நாவஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சோனா கல்வி குழுமத்தை சேர்ந்த தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய தரசான்றிதழ் வழங்கப்பட்டதை தொடர்ந்து அந்த சான்றிதழை அமைச்சர் கே.பி.அன்பழகன், கல்லூரி நிர்வாகிகளிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Related Tags :
Next Story