திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகா அலுவலகங்களில் கல்வி உதவித்தொகை பெற 233 பேர் விண்ணப்பித்தனர்


திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகா அலுவலகங்களில் கல்வி உதவித்தொகை பெற 233 பேர் விண்ணப்பித்தனர்
x
தினத்தந்தி 14 July 2018 10:45 PM GMT (Updated: 14 July 2018 10:06 PM GMT)

திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகா அலுவலகங்களில் கல்வி உதவித்தொகை பெற 233 பேர் விண்ணப்பித்தனர்.

நல்லூர்,


முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு பெற்ற விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க சிறப்பு முகாம் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு தெற்கு தாசில்தார் ரவிசந்திரன் தலைமை தாங்கினார்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை கலெக்டர் ராகவேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சாந்தி ஆகியோர் முன்னிலைவகித்தனர். இந்த முகாமை மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த முகாமில் மொத்தம் 224 மனுக்கள் பெறப்பட்டன.


இதுபோல திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு வடக்கு தாசில்தார் சிவகுமார் தலைமை தாங்கினார். தனிதாசில்தார் கனகராஜ் கலந்து கொண்டு விண்ணப்பதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டனர். இந்த முகாமில் 9 பேர் விண்ணப்பித்தனர்.

இந்த முகாமை சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த முகாம்களில் தொழிற்பயிற்சி மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி, கவின் கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டபடிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலைபட்ட படிப்பு, இளநிலை தொழிற்கல்வி மற்றும் முதுநிலை தொழிற்கல்வி உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வேண்டி மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டன.

Next Story