மாவட்டத்தில் 7 உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அதிரடிப்படை வீரர்கள் நியமனம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அதிரடிப்படை வீரர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு 2 அதிரடிப்படைகள் உள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் செல்லும் போது அவருடன் 2 வாகனங்களில் அதிரடிப்படை வீரர்களும் சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
இப்போது புதிதாக மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களின் துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அதிரடிப்படை வீரர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு உட்கோட்டத்துக்கும் ஒரு ஏட்டு தலைமையில் 10 போலீசார் அதிரடிப்படை வீரர்களாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அந்தந்த உட்கோட்டங்களிலோ அருகில் உள்ள உட்கோட்டங்களிலோ சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் போது துணை போலீஸ் சூப்பிரண்டுடன் அதிரடிப்படை வீரர்களும் தனி வாகனத்தில் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
இந்த அதிரடிப்படையினருக்கான வாகனங்கள், வாக்கி டாக்கி, லத்திகள் உள்ளிட்ட உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேற்று வழங்கினார். கடலூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிரடிப்படையினரிடம் அவர் பேசுகையில் பல்வேறு ஆலோசனைகளை கூறினார். குறிப்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் போது அதிரடிப்படையினர் எவ்விதம் செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அதிரடிப்படை வீரர்கள் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவார்கள். எங்காவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் துணை போலீஸ் சூப்பிரண்டுடன் சென்று அசம்பாவிதம் ஏதும் நேரிடாதபடி பாதுகாப்பு வழங்குவார்கள்.

Related Tags :
Next Story